Website Designed By Assistia Inc

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..! சைக்கிள் திருட்டை தடுக்க ஜப்பானியர்களின் பலே ஐடியா

2

ஜப்பானில் 2018 ல் மட்டும் 35,395 சைக்கிள்கள் திருடப்படுள்ளது. அவற்றில் 42% சைக்கிள்கள் சரியாக பூட்டப்பட்டிருந்தன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..! சைக்கிள் திருட்டை தடுக்க ஜப்பானியர்களின் பலே ஐடியா

 

மனிதர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாக்க எந்த அளவிலான எல்லைக்கும் செல்ல முடியும் என்பது உண்மைதான். இதனை உறுதி செய்யும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு நபர் தனது சைக்கிளின் இருக்கையில் பறவை எச்சங்கள் இருப்பது போன்ற தோற்றம் அளிக்கும் ஸ்டிக்கர்களை வடிவமைத்துள்ளார்.

யூனிலாட்டில் செய்தி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜப்பானின் சைட்டாமாவில் உள்ள மோட்டோகி ரியோகா, என்பவர் சைக்கிள் திருடப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க இந்த யோசனையை முன்வத்ததாக கூறப்படுகிறது. 29 வயதான அந்த நபரின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், பறவை எச்சங்கள் இருக்கும் சைக்கிள்களை அதிகமான திருடர்கள் திருட முயற்சிக்க மாட்டார்கள் என்பதாகும்.

ஜப்பானை சேர்ந்த இந்த நபர் டிசைனிங் குறித்து படித்து வருகிறார். சிபா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கன்சீ டிசைனில் தனது ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஸ்டிக்கர்களை அவர் வடிவமைத்தார். தற்போது இந்த ஸ்டிக்கர் அவருக்கு சிறப்பான பரிசையும் பெற்று கொடுத்துள்ளது. அவரது இந்த யோசனையை சோதிக்க மோட்டோகி ஒரு சமூக பரிசோதனையை மேற்கொண்டார்.


அதன்படி பறவை எச்சங்கள் போன்ற தனது வடிவமைப்பில் உருவான தனது ஸ்டிக்கர்களை, ஆயிரம் பைக்குகளில் ஒட்டி அவற்றை சரியாக பூட்டாமல் தெருவில் வைத்துள்ளார். ஐந்து நாட்களுக்கு பிறகு சென்று பார்த்த போது “ஸ்டிக்கர்கள் ஒட்டிய பைக்குகள் எதுவும் திருடப்படவில்லை”  என மோட்டோகி ரியோகா தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை வந்ததற்கான கரணம் குறித்து பேசிய அவர்,  மோட்டோகி ரியோகா மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி ஜப்பானில் மிதிவண்டிகள் திருட்டு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அதாவது “ஜப்பானில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பைக் திருடப்படுகிறது. மேலும்  2018 ல் மட்டும் 35,395 சைக்கிள்கள் திருடப்படுள்ளது. அவற்றில் 42% சைக்கிள்கள் சரியாக பூட்டப்பட்டிருந்தன.

இந்த பிரச்சனையை சரிசெய்ய மோட்டோகி விரும்பினார். இதுகுறித்த சமூக பரிசோதனையை மேற்கொள்ள, அவர் மக்கிளிடம் நிதி திரட்டியுள்ளார். இந்த நிதி மூலம் தனது கருத்தை செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.