Website Designed By Assistia Inc

தன்னுடைய பெயரை பயன்படுத்தும் எவரையும் நம்பவேண்டாம்.. நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை

6

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் என்றால் அது அஜித் குமார் தான். அவர் எந்த விதமான சமுக வலைத்தளங்களிலும் அதிகாரபூர்வ கணக்கு வைத்திருக்கவில்லை.

மேலும் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை, மீடியாக்களுக்கு பேட்டிகள் கொடுப்பதையும் அவர் நிறுத்திவிட்டார்.

இப்படி சில விஷயங்களில் இருந்து எப்போதும் ஒதுங்கியே இருக்கும் அவரது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் அவரது பிரதிநிதி போல செயல்பட்டு மோசடிகளில் ஈடுபடுவது தெரியவந்ததால் அது பற்றி எச்சரித்து வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அஜித்.

இது குறித்து நடிகர் அஜித்குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.பரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மை காலமாக தனிநபர்கள் சிலர் நடிகர் அஜித்தின் பெயரை தவறாக பயன்படுத்தி முன்னிலைப்படுத்தும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக நடிகர் அஜித்துடன் பணியாற்றி வரும் மேலாளரான சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும், சமூக மற்றும் தொழில் ரீதியான விஷயங்களுக்கு சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு நிறுவனமோ, தனிநபரோ அணுகினால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.