Website Designed By Assistia Inc

தயவு செய்து விட்டுவிடு… கெஞ்சிய இளம்பெண்: கல்லால் அடித்து கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

5

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்னின் நிர்வாண சடலத்தை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், 22 வயதான ஜோவனே அலெஜாண்டோ சில்வா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உட்டா மாகாணத்தின் South Salt Lake பகுதியில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார், நிர்வாண சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் 23 வயதான கைட்லின் பரோன் என்பவர் என பொலிசாருக்கு தெரிய வந்தது.

மேலும், அவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கல்லால் அடித்து கொல்லப்பட்டதும் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைட்லின் பரோனின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சியில்,

செப்டம்பர் 28 ஆம் திகதி காலை சுமார் 4.30 மணியளவில் இளைஞர்கள் இருவர், ஒரு ஆணும் பெண்ணும் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

தொடர்ந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது, தம்மை விட்டுவிட வேண்டும் எனவும், துன்புறுத்த வேண்டாம் எனவும் பெண்ணின் குரல் கெஞ்சுகிறது.

இதனையடுத்து தாக்குவது போன்ற பலத்த சத்தம் மற்றும் அலறல் கேட்கிறது. குறிப்பிட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசாருக்கு ரத்தம் தோய்ந்த கல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் மொத்தமாக நின்றுவிட, சுமார் 5 மணியளவில் ஆண் ஒருவர் மட்டும் அந்த பகுதியில் இருந்து வெளியேறுகிறார்.

கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் தற்போது சில்வாவை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ரத்தக்கறை படிந்த இரண்டு உள்ளாடைகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது Salt Lake நகர சிறையில் பிணையின்றி சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரணை அதிகாரிகளிடம் இந்த கொலை வழக்கு தொடர்பில் அவர் பேச மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.