Website Designed By Assistia Inc

கெட்டுப்போன மாமிசம் எனக் கூறி எரியூட்டப்பட்ட பெண்

4
துருக்கியில் பெண்ணியவாதியான காதலியை இளைஞர் ஒருவர் கொன்று, எரியூட்டிய சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் மென்டீஸ் பகுதியில் 27 வயதான பினார் குல்டெக்கின் என்பவரே தமது காதலரால் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று 32 வயதான Cemal Metin Avci என்பவர் துண்டாக்கப்பட்ட மாமிசங்களை எரியூட்டியபடி இருந்துள்ளார்.

அப்போது அப்பகுதிக்கு வந்த Mertcan Avci என்ற அவரது சகோதரர், கெட்ட வாடை வருவதன் காரணம் என்ன என வினவியுள்ளார்.

 

அதற்கு, கெட்டுப்போன மாமிசம் என தமது சகோதரரிடம் பதிலளித்துள்ளார் செமல் மெடின் அவ்சி.

ஆனால் அறியப்படும் பெண்ணியவாதியான பினார் குல்டெக்கின் மாயமான விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே,

விசாரணை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மெர்ட்கன் அவ்சியின் மொபைல் அழைப்புகளை கண்காணித்து, பின்னர் கைது செய்துள்ளனர்.

மெர்ட்கன் அவ்சி விசாரணை அதிகாரிகளிடம் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

மட்டுமின்றி, கெட்டுப்போன மாமிசத்தை எரியூட்டுவதாக தமது சகோதரர் தெரிவித்ததில் சந்தேகம் ஏது எழவில்லை எனவும்,

 

தமது சகோதரரின் மதுபான விடுதியில் உள்ள குளிர்பதனப் பெட்டி சேதமடைந்துள்ளதால், அதில் இருந்த மாமிசம் கெட்டுப்போனது தமக்கு தெரியும் என்பதால் சகோதரர் மீது சந்தேகம் எழவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜூலை 21 ஆம் திகதி செமல் மெடின் அவ்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் சகோதரர்கள் இருவரும் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

துருக்கியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர் 27 வயதான பினார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துருக்கியில் ஆண்களால் 27 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 23 பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.