Website Designed By Assistia Inc

பிக்பாஸில் உருக வைத்த போட்டியாளரின் பேச்சு

4

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்வில் பட்ட கஷ்டங்கள், அனுபவங்கள் குறித்து நடிகை அறந்தாங்கி நிஷா பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், என்னுடைய முழுப் பெயர் ஜகுபர்நிஷா. 12ம் வகுப்பு வரை அறந்தாங்கியிலேயே படித்தேன்.

பள்ளியில் படிக்கும் போது நான் பட்ட சின்ன சின்ன கஷ்டங்கள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை, சிறு வயதில் கூட்டுக்குடும்பமாகத்தான் வசித்தோம்.

அம்மாவும் நானும் சமையலறையில் படுத்திருப்போம். என் அப்பா ஆட்டுக் கறிக்கடை வைத்திருந்தார். காலையில் 3 மணிக்கு எழுந்து கடைக்குச் செல்லும்போது என் அப்பா பலமுறை என்னை மிதித்துவிட்டுச் சென்றிருக்கிறாராம். ஏனென்றால் நான் இருக்கிறமே இடமே தெரியாதாம்.

பள்ளியில் கூட நன்றாக இருக்கும் பெண்களை முன்னால் நிற்க வைப்பார்கள், நான் கருப்பு என்பதால் பின்னால் நிற்பேன், மற்றவர்கள் சொல்லித்தான் கருப்பு நிறம் பெரிய விஷயம் என்றே எனக்கு தெரிந்தது.

கருப்பாக இருப்பவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வரவே வராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை வர வைக்கிறீர்கள். அது பல பேருக்குப் புரியாது. அது உண்மை.

கல்லூரி படிக்கும் போது பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தேன, அங்கேயும் கடைசி பேச்சாளராகத் தான் இருப்பேன், அந்த நேரத்தில் அனைவரையும் சிரிக்கவைத்து பேசுவேன்.

 

கல்லூரிக் காலங்களில் என் தோழிகளுக்கு எல்லாம் காதல் கடிதங்கள் வரும், ஆனால் யாரும் எனக்கு கொடுத்ததில்லை, ஏன் கொரியர் கேர்ளாக கூட என்னை யாரும் பயன்படுத்தியதில்லை, அதை நினைத்து கவலைப்பட்டுள்ளேன்.

வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பே என் அத்தை பையன் என் வீட்டுக்கு வந்திருந்தார்.

அந்த நேரம் எங்கள் வீட்டில் கரண்ட் இல்லாமல் போக, இருட்டில் இருட்டிடம் காதலை சொன்னார், அப்போது இருந்த சூழலில் வேண்டாம் என முடிவெடுத்தேன்.

பிறகு எம்பிஏ படித்து முடித்ததும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர், நான் கருப்பாக இருப்பதால் என்னை வேண்டாம் என ஒதுக்கிவைத்தனர், அதன்பின்னர் என் அத்தை பையனையே திருமணம் செய்து கொண்டேன்.

கலக்க போவது யாரு தேர்வின்போது கூட என் அம்மா தைரியம் சொன்னதால் தான் சென்றேன், ஆனால் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இருந்த ஆண்கள், எனக்குக் கிடைத்த சொக்கத் தங்கங்கள்.

50 பையன்கள், நான் ஒருத்தி தான் மட்டும் தான் பெண், என்னை தாங்குவார்கள், நாம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவமானம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

நம்மிடம் உள்ள பலவீனத்தை ஒருவன் எப்போது பலமாக மாற்றுகிறானோ அப்போது பலவீனம் செத்துப்போய் விடும் என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.