Website Designed By Assistia Inc

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வந்த போலீஸ்: காரில் கண்ட அதிரவைக்கும் காட்சி

3

ஆந்திரபிரதேச மாநிலத்தில் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தை கண்டவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர்.

எங்கே போலீசார் வந்துவிட போகிறார்கள் என்று முன்னரே காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் வந்தனர். அங்கிருந்தவர்கள் காரை அப்படியே விட்டுவிட்டு அடிபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள் என்று சொன்னதும், போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அப்போது விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தனர்.

 

சோதனையில் காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

கார் விபத்துக்குள்ளானதால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பிச்சென்றிருப்பது போலீசாருக்கு தெரிந்தது.

இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.