Website Designed By Assistia Inc

தாங்கமுடியாத வயிறுவலியை அசால்ட்டாக விட்ட இளம்பெண்-பின்பு காத்திருந்த பேரதிர்ச்சி

2

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட வயிறுவலியை சாதாரணமாக எடுத்தக்கொண்டுள்ளதால், தற்போது வெளியாகியுள்ள உண்மை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மேடலின் ஜோன்ஸ்(21). இவர் கடந்த 4 ஆண்டுகளாகத் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இவ்வாறு ஏற்படும் வயிறு வலியினை மாதவிடாயினாலும், மலச்சிக்கலாலும் ஏற்பட்டுள்ளது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவ்வப்போது சில மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வலி அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து பார்த்துள்ளார். பரிசோதனையில் கருப்பையில் ரத்தக் கட்டி பெரிய அளவிற்கு இருப்பதைப் பார்த்து மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள்.

இன்னும் சில காலம் கவனிக்காமல் விட்டிருந்தால் அந்த கட்டி உடைந்து மேடலினின் உயிருக்கே ஆபத்தாக அமைந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மேடலினை பார்ப்பதற்குப் பிரசவத்திற்குத் தயாராக இருக்கும் பெண்ணை போன்று இருந்ததாக மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்தார்கள்.

மேடலினின் கருப்பைகளில் ஒன்று முழுமையாக மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ளது எனப் பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தற்போது வலியிலிருந்து மீண்டுள்ளார்.

இதுகுறித்து இளம்பெண் கூறுகையில், ”எனக்கு வயிற்று வலி இருந்த போதும் சிறு வயதிலிருந்தே மருத்துவமனை பக்கம் போகக் கூடாது என்ற எண்ணம் இருந்தது தான் முக்கிய காரணம். அது எவ்வளவு தவறு என்பது தற்போது புரிந்துள்ளது. இதனால் எனது சிறுநீரகத்தில் ஒன்றினை இழந்துள்ளதாகவும், அதனையும் அகற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உடலில் ஏற்படும் மாற்றங்களை சாதாரணமாக எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.