Website Designed By Assistia Inc

வவுனியாவில் அனுமதியின்றி கிரவல் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மீட்பு: இருவர் கைது

2

வவுனியா நகரில் அனுமதிப்பத்திரமின்றி கிரவல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனத்தை வவுனியா பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

அண்மையில் வவுனியா நகரில் அதிகளவிலான கிரவல் கடத்தல் இடம்பெறுவதாக தெரியவந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதன்போது செட்டிக்குளம், நேரியகுளத்தில் இருந்து அனுமதியின்றி கிரவல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு டிப்பர் வாகன சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.